×

2வது டி20ல் ஆஸி. பதிலடி

மும்பை: இந்திய மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்தது. மும்பையில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீச… இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

மந்தனா, ரிச்சா கோஷ் தலா 23 ரன், ஜெமிமா 13 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கார்த், அன்னபெல், வேர்ஹம் தலா 2, கார்டனர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. அணிக்கு கேப்டன் அலிஸா ஹீலி – பெத் மூனி ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தது. ஆஸி. 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து வென்றது.

The post 2வது டி20ல் ஆஸி. பதிலடி appeared first on Dinakaran.

Tags : Aussies ,T20I ,MUMBAI ,2nd T20I ,India Women ,Australia ,Aussie ,India ,Dinakaran ,
× RELATED 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து