×

பஞ்சாப் அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்: முதல்வர் பகவந்த் மான் நன்றி

சண்டிகர்: பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில அரசு பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்தும் செயலில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநில ஆளுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.  இதுதொடர்பாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் அந்தந்த மாநில ஆளுநர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், சொத்து பரிமாற்றம் (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023, பதிவு (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023 மற்றும் இந்திய முத்திரை (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023 ஆகிய 3 மசோதாக்களுக்கு ஆளுநர் புரோகித் நேற்று ஒப்புதல் வழங்கினார். இந்த 3 மசோதாக்களும் கடந்த நவம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் ஆளுநர் புரோகித்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் பகவந்த் மான் சிங், விரைவில் மற்ற மாற்ற மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

The post பஞ்சாப் அரசின் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்: முதல்வர் பகவந்த் மான் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bhagwant Maan ,Chandigarh ,Tamil Nadu ,Kerala ,Punjab ,BJP ,state government ,Governor ,Punjab government ,CM ,Bhagwant Mann ,Dinakaran ,
× RELATED 400 தொகுதி என்பது பொய் கோஷம் அடுத்து...