×

கார்கிலில் முதல் முறையாக இரவில் தரையிறங்கிய ஹெர்குலஸ் விமானம்

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கருடன் (கருட்) கமாண்டோ படை என்பது இந்திய விமானப்படையின் சிறப்புப் படைப் பிரிவாகும். இது முக்கிய விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள், தேடல், மீட்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறது. இப்படையினர் ஐஏஎப். சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியின் போது இந்த ஹெர்குலஸ் போக்குவரத்து போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இமயமலையில் 8,800 அடி உயரத்தில் உள்ள கார்கில் பகுதிக்கு போர் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல ஐஏஎப்.பின் சி-17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜெ ஹெர்குலஸ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் முதல் முறையாக கார்கில் விமான தளத்தில் நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாக தரையிறங்கியதாக ஐஏஎப்.பின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஐஏஎப்.பின் பதிவில், ஓடுபாதையில் செல்லும் போதே நிலப்பரப்பை மறைத்தல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுடன் கருடன் படையினரின் பயிற்சியும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய விமானப்படையின் ஹெர்குலசை இரவு நேர போக்குவரத்து பணியிலும் ஈடுபடுத்த முடியும் என்பது உறுதியாகி உள்ளது.

The post கார்கிலில் முதல் முறையாக இரவில் தரையிறங்கிய ஹெர்குலஸ் விமானம் appeared first on Dinakaran.

Tags : Kargil ,New Delhi ,Indian Air Force ,Garuda (Garut) Commando Force ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...