×

கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக முதலீடு: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் பாராட்டு

டிவிஎஸ் குழும தலைவர் வேணுசீனிவாசன் பேசியதாவது: தமிழகம் தேசிய அளவில் வணிக நடவடிக்கைகளை எளிதாக்குதலில் 14வது இடத்தில் இருந்து தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அத்துடன், ஏற்றுமதியை 100 பில்லியன் டாலரில் இருந்து, 126 பில்லியன் டாலராகவும் உயர்த்த அறிவித்துள்ளார். அவரது தலைமையில் இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும்.

கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் தற்போது வரை 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.2.70 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டதுடன், 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த மாநாடு தமிழகத்தை சிறந்த இடத்துக்கு உயர்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக முதலீடு: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TVS Group ,Venu Srinivasan ,Venuseenivasan ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...