×

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: அதிகனமழை பெய்யும் வாய்ப்பு

சென்னை வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தென் தமிழக உள் மாவட்டங்களில் மிகத் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராஜாபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. திருநெல்வேலி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், ரூ.முஷ்ணம், பெண்ணாடம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்தது.

இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேநிலை 10ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: அதிகனமழை பெய்யும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,North East ,Monsoon ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...