×

கடற்கொள்ளையர்களின் கைவரிசையால் பாதுகாப்பு மண்டலமாக இந்திய பெருங்கடல் மாற்றப்படும்: கடற்படைத் தலைவர் பேட்டி

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதால், அப்பகுதியை பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும் என்று கடற்படைத் தலைவர் ஆர்.ஹரிகுமார் கூறினார். இந்தியாவுக்கு சொந்தமான சைபீரிய கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்டது குறித்து இந்திய கடற்படைத் தலைவர் ஆர்.ஹரிகுமார் அளித்த பேட்டியில், ‘நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களது முக்கியக் கடமை. அதனை தான் நிறைவேற்றினோம். இந்திய குடிமக்கள் எங்கெல்லாம் ஆபத்தான நிலையில் இருக்கிறார்களோ, அங்கு சென்று அவர்களைக் காப்பாற்றுவது எங்களின் கடமை. கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது,
இந்தியக் கப்பலாக இல்லாவிட்டாலும் கூட இந்தியர்களை விடுவிக்க கடற்படை துரிதமாக செயல்பட்டது. இதைத்தான் சூடானிலும், உக்ரைனிலும் செய்தோம்.

கடற்கொள்ளையர்களை இப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்படும்’ என்றார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் அரபிக்கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உட்பட 21 பயணிகளுடன் இருந்த லைபீரிய சரக்குக் கப்பலான எம்வி லைலா நோர்ஃபோக், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலை மீட்க கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் துரிதமாக செயல்பட்டது. சரக்கு கப்பலின் அருகே ஹெலிகாப்டரை அனுப்பி வைத்து கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது. இதனால் கப்பலை விட்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். அதன்பின் மார்கோஸ் கமாண்டோ வீரர்கள் சரக்கு கப்பலை அடைந்து 15 இந்தியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கடற்கொள்ளையர்களின் கைவரிசையால் பாதுகாப்பு மண்டலமாக இந்திய பெருங்கடல் மாற்றப்படும்: கடற்படைத் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Indian Ocean ,Navy ,NEW DELHI ,R. Harikumar ,Indian Navy ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...