×

கடலூர் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீடு தொடர்பான கருத்தரங்கு: அரசுத்துறை அதிகாரிகள், தொழிற்சாலை தரப்பினர் பங்கேற்பு

கடலூர்:கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு அலுவலக அரங்கில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ந்து மாநில சிப்காட் திட்ட மேலாண்மை இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் தொழில் முதலீடு கருத்தரங்கு மற்றும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வரவேற்றார். சிப்காட் திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டு முன்னிலை வகித்தார்.

சிப்காட் திட்ட வளாக தொழிற்சாலை கூட்டமைப்பு நிர்வாகிகள் டாக்ரோஸ் அறவாழி மற்றும் நசீர் கான், கெம்ப்ளாஸ்ட் தண்டபாணி, கிரிம்சன் ஆர்கானிக் பிரபாகரன், தொழிற்சாலை தரப்பு அதிகாரிகள் வீரமணி ,இளங்கோ, ஜெயகாந்தன், அன்பழகன் ,அருள், கிஷோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் சிப்காட் வளாக திட்ட பகுதி மூன்று கட்டங்களாக செயல்பட்டு வரும் நிலையில் 2,625 ஏக்கர் பரப்பளவில் தொழில் மேம்படுவதற்கான தொழிற்சாலை வளாகமாக அமைந்துள்ளது. 80 தொழிற்சாலைகள் பதிவு பெற்ற நிலையில் 54 நிறுவனங்கள் இயங்கி வருகிறது .

முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ந்து கடலூர் சிப்காட் வளாகப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட நடமாடும் ரோந்து படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்,  சுற்றுச்சூழல் தன்மை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. இது போன்று தொழிற்சாலை செயல்பாடுகள் ,செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் கூடுதலாக விரிவாக்க பணி மேற்கொள்ளுதல், முதலீடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கருத்துறை வழங்கப்பட்டது.

உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மேம்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் வேலை வாய்ப்புகள் கடலூர் சிப்காட் வளாகத்தில் கூடுதலாக அமையும் என திட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

The post கடலூர் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீடு தொடர்பான கருத்தரங்கு: அரசுத்துறை அதிகாரிகள், தொழிற்சாலை தரப்பினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore Ciphkot Campus ,Cuddalore ,Chipcat ,Dr. ,Sentilraj ,World Industry Investors Conference ,Chipcat Factory Federation Office Arena ,Cuddalore Chipcat Campus ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...