×

வாலிபரிடம் வழிப்பறி

சிவகாசி, ஜன. 7: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரை சேர்ந்தவர் பாலகணேஷ் (28). இவர் லோடுமேன் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பாலகணேஷ் தனது நண்பர் அருண்குமாருடன் இந்திராநகர் முனியசாமி கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த அந்தோணி பிரசன்னா (27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பாலகணேஷ் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரிடம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Balaganesh ,Naranapuram Budur ,Arunkumar ,Indiranagar Muniyaswamy temple ,Subramaniapuram ,
× RELATED சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்