×

போலி சான்றிதழ் கொடுத்து தபால் பணியில் சேர முயன்ற வாலிபர் மீது வழக்கு

விருதுநகர், ஜன. 7: சிவகாசி விஸ்வநத்தம் பாரைபட்டியை சேர்ந்தவர் புவனேஷ். இவர் தபால் துறையில் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இதற்காக கடந்த செப்.31ம் தேதி நடந்த முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் போலியான 10ம் வகுப்பு சான்றிதழை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளார்.அதை தொடர்ந்து அக்.21ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது. அப்போது புவனேஷ் பதிவேற்றம் செய்த சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்தது.

இதை தொடர்ந்து புவனேஷ் படித்த பள்ளியின் தலைமையாசிரியரிடம் சான்றிதழின் உண்மைத்தன்மை சான்று பெறப்பட்டது. அதில் புவனேஷ் 10ம் வகுப்பில் பெற்ற 307 மதிப்பெண்கள் பெற்றிருந்ததும், அதனை 496 என திருத்தி போலியான சான்றிதழ் ஆவணங்கள் தயார் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் உட்கோட்ட தபால் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் விருதுநகர் கிழக்கு போலீசில் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி சான்றிதழ் கொடுத்து தபால் பணியில் சேர முயன்ற வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Bhuvanesh ,Sivakasi ,Viswanantham ,Baraipatti ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்