×

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி: 9ம் தேதி நடக்கிறது

தேனி, ஜன. 7: தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வகுப்பு, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் ஜன.9ம் தேதி நடக்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயிரிடப்பட்ட முக்கிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான மா, முருங்கை, தென்னை, நெல், சோளம், மக்காச்சோளம், தட்டைப்பயறு, மொச்சை, பருத்தி மற்றும் கரும்பு பயிர்களில் சேதம் விளைவித்த பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை தோட்டக்கலைக்கல்லூரி பூச்சியியல் மற்றும் நோயியியல் துறை பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.
எனவே, வருகிற 9ம் தேதி காலை 10 மணியளவில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் விவசாயிகள் கலந்து கொண்டு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கற்றுக்கொண்டு பயன்பெறலாம் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி: 9ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Theni ,Periyakulam College of Horticulture ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்