×

மார்கழி மாத சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், ஜன.7: மல்லசமுத்திரம் சந்தைபேட்டை அருகில் உள்ள அழகுராயபெருமாள் கோயிலில், தனுர்மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று மார்கழி சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் வீரபக்த ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. காலை முதல் அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

The post மார்கழி மாத சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Margazhi ,Mallasamutram ,Dhanurmat ,Agurayaperumal temple ,Market Petty ,Moolavar Soundararaja Perumal ,Veerabhakta Anjaneyar ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு