×

இலவச மருத்துவ முகாம்

தேன்கனிக்கோட்டை, ஜன.7: தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் டைட்டன் இன்ஜினியரிங், ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்கம், மைராடா தொண்டு நிறுவனம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தியது. முகாமில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது மருத்துவர் குமாரசாமி தலைமையிலான இமாஜாரெட்டி, ராகுல்ரெட்டி, சுஜீத், அஜித் உள்ளிட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 90 பேரை மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். 40 பேர் கண் சிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Titan Engineering ,Hosur Impact Arima Sangam ,Myrada ,Charity ,Hosur St. Peter's Medical College Hospital ,Research Institute ,Iruthukottai ,Medical Camp ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு