×

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

கோவை, ஜன.7: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (22). கட்டிட தொழிலாளி. இவர் கோவையில் தங்கி ராமநாதபுரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவர் ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை எந்திரம் மீது நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த டிரன்ஸ்பார்மர் ஒயர் அபுர்பா பிஸ்வால் மீது பட்டது. இதில் அவர் மின்சாரம் தாக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய பாதுகாப்பு இன்றி பணியில் அமர்த்தியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Northern State ,Goa ,Aburba Biswal ,West Bengal ,Ramanathapuram ,Olympus ,North State ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை...