×

எல்ஐசி: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு: தயாரிப்பாளர், விக்னேஷ் சிவனுக்கு எல்ஐசி நோட்டீஸ்

சென்னை: லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்ற பட தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி படத் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, எல்.ஐ.சி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், எல்ஐசி: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருவது குறித்த விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் எல்ஐசி என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எல்ஐசி தரப்பில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு. அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் முயற்சி நடந்துள்ளது. எனவே, இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

The post எல்ஐசி: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு: தயாரிப்பாளர், விக்னேஷ் சிவனுக்கு எல்ஐசி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : LOVE INSURANCE CORPORATION ,VIGNESH SHIVAN ,Chennai ,Seven Screen Studio ,Vignesh Sivan ,L. I. C ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...