×

குறிப்பிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டணம்: அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என்ற கொள்கைக்கு அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் கடந்த புதன்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் 2023-24க்கான தேர்வு கட்டணத்தை உயர்த்தும் முடிவை நிறுத்தி வைக்க சிண்டிகேட் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. இதுதவிர அண்ணா பல்கலை வளாக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 15 சதவீத இடங்கள் அனைத்து படிப்புகளிலும் ஒதுக்கப்படுகின்றன.

அந்தவகையில் 400 இடங்கள் வருகின்றன. அதில் 100 இடங்களில் மட்டுமே இந்த பிரிவு மாணவர்கள் சேருகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில்தான் பெருமளவில் சேருவதாகவும், மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட மற்ற படிப்புகளில் மாணவர்கள் சேருவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதை சரிசெய்யும் விதமாக மற்ற படிப்புகளில் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என்ற கொள்கைக்கும் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

The post குறிப்பிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டணம்: அண்ணா பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Anna University Syndicate ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...