×

மழை வெள்ளத்தில் தொலைத்தவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மறு சான்றிதழ்கள்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்திலும், 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்திலும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் தொலைந்தும் சேதம் அடைந்தும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் வகையில் அரசு தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக https://www.mycertificates.in/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து, அதில் விண்ணப்பிக்கவும், சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி 8 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் கோரி 13,579 பேர் விண்ணப்பித்து இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களுக்காக 11 ஆயிரத்து 543 பேரும், பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களுக்காக 2 ஆயிரத்து 36 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை பொறுத்தவரையில், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. இம்மாத இறுதிக்குள் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மழை வெள்ளத்தில் தொலைத்தவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மறு சான்றிதழ்கள்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,Mijam ,Nellai ,Thoothukudi ,Kanyakumari ,Tenkasi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...