×

ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கபட்டது ஏன்? ஐகோர்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கபட்டது ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ளம் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையை அதிகரிக்க, வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றதில் மனு அளித்தார். மேலும் வெள்ள நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்களை தொலைத்திருக்கக் கூடும் என்பதால் ரொக்கமாக வழங்கப்பட்டது. என தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாததாலும், வங்கிக் கணக்கு விவரம் பெற தாமதம் என்பதாலும் ரொக்கமாக தரப்பட்டது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லமல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் சென்னைஉயர்நீதிமன்றத்தில் அறிக்கை தக்கல் செய்தார்.

மேலும், இதுரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை கோரும் 7.30 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கபட்டு தகுதியானொருக்கு டெப்பாசிட் செய்யப்படும். வெள்ளத்தால் பலியானோருக்கான இழப்பீடு, பயிர் சேத இழப்பீடு உள்ளிட்டவற்றை அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதனை அடுத்து தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு வழக்கு விசாரணையை பிப்.2-ம் ஒத்திவைத்தது.

The post ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கபட்டது ஏன்? ஐகோர்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,iCourt ,Chennai ,Tamil Nadu government ,COLLEGE ,STUDENT ,SELVAKUMAR ,MIKJAM ,
× RELATED சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை...