×
Saravana Stores

திருவொற்றியூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீச்சு: 7 பெட்டி கண்ணாடி உடைந்தது

திருவொற்றியூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து பீகார் மாநிலம் சாப்ரா வரை செல்லக்கூடிய 20 பெட்டிகளை கொண்ட கங்கா காவேரி விரைவு ரயில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு விம்கோநகர் மார்க்கமாக சென்ட்ரல் நோக்கி சென்றது. திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே வரும்போது ரயில்பாதையோரம் நின்றிருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த ரயில் மீது சரமாரியாக கற்களை வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் ரயிலின் குளிர்சாதனம் மற்றும் சமையல் அறை பெட்டி உள்பட 7 பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்தது.

இதனால் பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டனர். இதையடுத்து ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் விரைந்துவந்து ரயில் பெட்டிகளை சோதனை யிட்டனர். இதன்பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து தண்டையார்பேட்டை மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குபதிவு செய்து ரயில் கண்ணாடியை உடைத்த நபர்களை பற்றி விசாரிக்கின்றனர்.

“திருவொற்றியூர் முதல் விம்கோ நகர் வரை உள்ள ரயில் பாதைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது அருந்துகின்றனர். போதையில் தகராறு செய்கின்றனர். இவர்கள்தான் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்திருக்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post திருவொற்றியூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீச்சு: 7 பெட்டி கண்ணாடி உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Thiruvatiyur ,Thiruvotiyur ,Ganga Kaveri Express Train ,Chennai Central ,Bihar ,Chapra ,Vimgonagar Marsh Central ,Tiruvatiyur Railway Station ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை