×

கடன் பிரச்சனையை போக்கும் மார்கழி மாத சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு..!!

மார்கழி மாதத்தில் வழிபாடு செய்வது என்பது ஒரு மனிதனுக்கு புண்ணியத்திற்கு மேல் புண்ணியத்தை சேர்க்கும் சக்தி படைத்தவை. அதுமட்டுமல்லாமல், செய்த பாவத்திற்கு உண்டான தண்டனையும் கழித்துக் கொண்டே போகும். நாம் கைநீட்டி வாங்கிய கடனை படிப்படியாக திருப்பி அடைக்கவும் உதவும்.

ஆம், மார்கழி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளுக்கு அப்படி ஒரு மகிமை உண்டு. பெருமாள் கோவில் காலை 5 மணிக்கு முன்பாகவே திறந்திருக்கும். எனவே, சனிக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து விட வேண்டும். சனிக்கிழமையில் மட்டும் தான் அதிகாலையில் குளிக்க வேண்டும் என்று கிடையாது.

மார்கழி மாதம் முழுவதுமே அதிகாலையில் எழுந்து குளிப்பது நல்லது. பின்னர், பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை வேண்டி ஒரு மஞ்சள் நிற துணியில் துளசி இலை 2, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறு துண்டு மூன்றையும் வைத்து சின்ன முடிந்துக் கொள்ளுங்கள். இந்த முடிச்சில் லட்சுமி தேவியும், பெருமாளும் நிறைவாக இருப்பார்கள்.

இதற்கு காரணம் இந்த மூன்று பொருட்களுமே அவர்களுக்கு மிகவும் பிடித்த பொருட்கள். இப்போது இந்த முடிச்சை கையில் வைத்துக் கொண்டே அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்குகள் ஏற்றி வைத்து, பெருமாளிடம் மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். குறிப்பாக, கடன் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக நல்ல பலனை அந்த பெருமாள் உங்களுக்கு வழங்குவார்.

அதுவும், தேவர்கள் சூழ, தேவைகள் வருகையில் விடியும் அதிகாலையில் இம்மாதிரியாக பிராத்தனை செய்தால், பலன் இரட்டிப்பாக இருக்கும். சூரிய உதயத்திற்கு முன்பு பெருமாள் கோவிலுக்கு சென்று பிராத்தனையை செய்துவிட்டு, கையில் வைத்திருக்கும் அந்த முடிச்சை அப்படியே உங்க பணப்பெட்டியில் வைத்துவிடுங்கள்.

அடுத்த வாரம் சனிக்கிழமை பழைய பொருட்களை எடுத்து செடி கொடுகளுக்கு கீழே போட்டுவிட்டு மறுபடியும் புதியதாக அந்த மூன்று பொருட்களை வைத்து முடிந்து, இதேபோல் வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி மாதம் முடியும் வரை சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று இவ்வாறு வேண்டுதல் வைத்தால் நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

The post கடன் பிரச்சனையை போக்கும் மார்கழி மாத சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Margazhi ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் வருடாபிஷேகம்