×

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு: புதுக்கோட்டை நீதிமன்றம்

 

புதுக்கோட்டை: சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜரானார்.

தமிழக முன்னாள் சுகாதார துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதிமுக ஆட்சியில் ரூ.35.79 கோடி அசையும், அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்து மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கே 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் மே மாதம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

 

The post முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு: புதுக்கோட்டை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : minister ,Vijayabaskar ,Pudukkottai Court ,Pudukkottai ,Former Minister ,C. Vijayabaskar ,C. ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்