மதுரை: மதுரையில் ரூ.600 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை அழகர்கோயில் சாலை ரேஸ் கோர்ஸ் காலனி பகுதியில் உள்ள நிலம் மதுரா கோட்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. 1923 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் 14 ஏக்கர் நிலம் மதுரை கோட்ஸ் நிறுவனத்துக்கு தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டது. மதுரை கோட்ஸ் நிறுவனம் நில ஒப்படைப்பு விதிமுறைகளை மீறியதால் தரை வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மீட்கப்பட்டுள்ள நிலத்தில் அத்துமீறி நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post மதுரையில் ரூ.600 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.