×

உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல்..!!

சென்னை: ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்கி 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.

இந்நிலையில், ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7,000 கோடி முதலீட்டில் ஐ-போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் அடுத்து வரும் 6 ஆண்டுகளில் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,TATA ,HOSUR ,Chennai ,Ozur ,Ministry of Small, Small and Medium Enterprises ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!