×

மெட்ரோ ரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன.6: சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள், நாளை முதல் மூடப்படும்.
 ராயப்பேட்டை நெடுஞ்சாலை (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வரை)
 ஆர்.கே.மடம் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை )
 ஆர்.கே.மடம் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை) ஆகிய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக பின்வரும் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
பகுதி 1: ராயப்பேட்டை நெடுஞ்சாலை (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வரை)
 ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை – வலது – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு – வலது – ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
 ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் – ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீல்கிரீஸ் கடை – மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை – வலது – டிடிகே சாலை – கவுடியா மட சாலை வரை செல்லும்.
 வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.
 அஜந்தா சந்திப்பில் இருந்து அதிமுக அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பகுதி 2: ஆர்.கே.மடம் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை).
 ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் – வலது லஸ் சர்ச் சாலை- டி சில்வா சாலை – பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை – இடதுபுறம் திரும்பி – சி.பி ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 ஆர்.கே.மடம் சாலையில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் – ரங்கா சாலை – வலது – கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ – லஸ் சர்ச் சாலை வழியாக – பி.எஸ்.சிவசாமி சாலை – வலது – சுலிவன் கார்டன் தெரு – இடது – ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.
 கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
 சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மடம் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.
 மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக புறப்படும் மாநகர மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை – இடதுபுறம் திரும்பி – தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.
பகுதி 3: ஆர்.கே.மடம் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை).
 வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி – செயின்ட் மேரிஸ் சாலை – இடதுபுறம் திரும்பி – சி.பி.ராமசாமி சாலை – காளியப்பா சந்திப்பு – நேராக ஆர்.ஏ.புரம் 3வது குறுக்குத் தெரு சென்று – காமராஜர் சாலை – சீனிவாசா அவென்யூ – கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை – இடது – திருவேங்கடம் தெரு – திருவேங்கடம் தெரு விரிவாக்கம் – வி.கே. ஐயர் சாலை – தேவநாதன் தெரு – வலது – செயின்ட் மேரிஸ் சாலை – இடது – ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 மந்தைவெளி செல்லும் மாநகர பேருந்துகள் – வாரன் சாலை இடதுபுறம் – செயின்ட் மேரிஸ் சாலை – வலதுபுறம் திரும்பி – சிறுங்கேரி மட சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.
 சீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப் பாதையாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rayapetta, Mylapore ,Chennai ,Chennai Metropolitan Traffic Police ,Rayapetta, Mylapore, ,Mantaivela ,Chennai Metro Rail ,Rayapetta Highway ,Ajanta junction RK Road… ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்