×

சேரன்மகாதேவி ஆற்றுச்சாலையில் அந்தரத்தில் தொங்கும் ராட்சத மரக்கிளை

வீரவநல்லூர்,ஜன.6: சேரன்மகாதேவியிலிருந்து நெல்லை டவுன் செல்லும் வழியில் ஆற்றுச்சாலை உள்ளது. நூறு ஆண்டுகள் பழமையான இச்சாலையின் இருபுறமும் ஏராளமான மருதமரங்கள் உள்ளது. இந்த ஆற்றுச்சாலை வழியாக டவுன், ஜங்சன், முக்கூடல் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச்சாலையின் கீழ்புறம் உள்ள ஒரு மருதமரத்தில் பட்டுப்போன ராட்சத மரக்கிளை ஒன்று உடைந்து பக்கவாட்டில் உள்ள மற்றொரு கிளையில் தலைகீழாக தொங்குகிறது. காற்றின் வேகம் அதிகரித்தால் அக்கிளையும் உடைந்து சாலையின் மையத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையின் மையத்தை குறிவைத்து மற்றொரு பட்டுப்போன ராட்சத மரக்கிளையும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதே போன்று மேலும் சில மரங்களில் ராட்சத கிளைகள் விழுந்து விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேரன்மகாதேவி ஆற்றுச்சாலையில் விபத்து ஏற்படும் முன்னர் பட்டுப்போன ராட்சத மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேரன்மகாதேவி ஆற்றுச்சாலையில் அந்தரத்தில் தொங்கும் ராட்சத மரக்கிளை appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi river ,Veeravanallur ,Cheranmahadevi ,Nellie Town ,Junction ,Mukodal ,Alankulam ,Cheranmahadevi canal ,Dinakaran ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு