×

தேனியில் ரூ.2 கோடியில் அறிவுசார் மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

 

தேனி, ஜன. 6: தேனி புதிய பஸ் நிலைய வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில்ரூ.258 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டிற்கு அறிவுசார் மையங்கள் மற்றும் சுகாதார வளாகங்கள், பாலங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது.

சென்னையில் இருந்து காணொலி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இப்பணிகளை திறந்து வைத்தார். இதன்படி, தேனி நகர் புதிய பஸ்நிலைய வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித் தேர்வில் கலந்து கொள்வோர் படிக்க தேவையான பொதுஅறிவு நூல்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, இலக்கியம், நிதி மேலாண்மை மற்றும் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் 75 பேர் அமர்ந்து படிக்கும் வகையில், வாசிப்பு அரங்கம், ஸ்மார்ட் கிளாஸ் அரங்கம், குழந்தைகள் படிப்பதற்கான வசதி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவுசார் மையத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளில், கலெக்டர் ஷஜீவனா, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் முஜிபுர் ரஹ்மான், தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகராட்சி பொறியாளர் பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், கவுன்சிலரும் நகர திமுக செயலாளருமான நாராயணபாண்டியன், கவுன்சிலர்கள் சூர்யா பாலமுருகன், கடவுள், கிருஷ்ணபிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் ரூ.2 கோடியில் அறிவுசார் மையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார் appeared first on Dinakaran.

Tags : Theni ,CM ,Stalin ,Chief Minister ,M.K.Stalin ,Theni New Bus Station ,Chennai ,Tamil Nadu ,Intellectual Center ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!