×

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஜன.22ல் ஆயிரம் ெபான் சப்பர முகூர்த்த நிகழ்ச்சி

அழகர்கோவில், ஜன. 6: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா வரும் ஜன.22ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்தலாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியும், பின்னர் மாலை 3 மணிக்கு மேல் 3.35 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் ஆயிரம் பொன் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் கள்ளழகர் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் நடைபெறவுள்ளது.

அப்போது கோவிலில் சப்பர முகூர்த்த விழா மேளதாளம் முழங்க துவ்ங்கியது. இதில் முதலாவதாக ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், கோயில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஜன.22ல் ஆயிரம் ெபான் சப்பர முகூர்த்த நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Perumal Temple, Madurai ,Alagarkoil ,Madurai Alaghar Temple ,Chitrai Perundruvizha ,Kallaghar temple ,Chappara Mukurtha ,Perundruvizha ,
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்