×

ஆஸி.யுடன் முதல் டி20 இந்தியா வெற்றி

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 141 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. லிட்ச்பீல்டு 49 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பெர்ரி 37, மூனி 17, அன்னபெல் 12 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் டைட்டஸ் சாது 4, ஷ்ரேயங்கா, தீப்தி தலா 2, ரேணுகா, அமன்ஜோத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து அபாரமாக வென்றது. மந்தனா 54 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 64 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெமிமா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post ஆஸி.யுடன் முதல் டி20 இந்தியா வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,T20 ,Aussies ,Mumbai ,Australia Women ,TY Patil Arena ,Australia ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...