×

இந்தியாவின் அதிக வயது கரடி உயிரிழப்பு

போபால்: இந்தியாவின் அதிக வயதுடைய கரடி போபால் உயிரியல் பூங்காவில் நேற்று உயிரிழந்தது. ம.பி மாநிலம் போபாலில் உள்ள வன் விஹார் தேசிய பூங்கா மற்றும் விலங்குகள் மீட்பு மையத்தில் பப்லு என்ற ஆண் கரடி இருந்தது. இந்த கரடி இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் கரடிகளில் அதிக வயதுடைய கரடி ஆகும். 36 வயதுடைய இந்த கரடி உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக உணவு எதையும் உண்ணாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கரடி உயிரிழந்ததாக உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் அதுல் குப்தா தெரிவித்தார்.

The post இந்தியாவின் அதிக வயது கரடி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Bhopal ,Bhopal Zoo ,M. ,Bablu ,Van Vihar ,National ,Park ,Animal Rescue Centre ,Bhopal, B ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!