×

முட்டை விலை 20 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 20 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்தார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 445 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில், முட்டை விலை குறைந்து வருவதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்த நிலையில், முட்டை விற்பனை சற்று குறைந்துள்ளது.

The post முட்டை விலை 20 காசு குறைந்தது appeared first on Dinakaran.

Tags : NAMAKAL ,NAMAKAL ZONE ,NEC ,president ,Singaraj ,Dinakaran ,
× RELATED நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை...