×

இயந்திர கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குவைத் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் 138 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 146 பேர் பயணிக்க இருந்தனர். விமானம் புறப்படும் முன் இயந்திரங்களை விமானிகள் சரிபார்த்தனர். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். நள்ளிரவு 12 மணி வரையில் விமானத்தில் கோளாரை சரி செய்ய முடியவில்லை.

இதனால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு மணி வரை விமானத்தின் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணி முடியாததால் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரையும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இந்த விமானம் இன்று (நேற்று) இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

The post இயந்திர கோளாறால் ஏர் இந்தியா விமானம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Kuwait ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...