×

தேடப்படும் குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் ரூ.2.3 கோடிக்கு ஏலம்

மும்பை: கடந்த 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பை நிழல் உலக தாதாவான தாவூத்தை சர்வதேச குற்றவாளியாக ஐநாவும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இந்தியாவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரத்னகிரி மாவட்டம் கேட் தாலுக்கா மும்கே கிராமத்தில் இருந்த 4 சொத்துகள் நேற்று ஏலம் விடப்பட்டன. இதில் 2 சொத்துகளை யாரும் ஏலம் எடுக்கவில்லை. 170.98 சதுர மீட்டர் கொண்ட விவசாய நிலத்தை ரூ.2 கோடிக்கும், 1,730 சதுர மீட்டர் கொண்ட விவசாய நிலத்தை ரூ.3.28 லட்சத்துக்கும் ஒரே நபர் ஏலத்தில் எடுத்தார். நிலத்தை ஏலம் எடுத்த நபர் தன் பெயரை தெரிவிக்கவில்லை. அந்த நிலத்தில் பள்ளிகூடம் கட்டப்படவுள்ளது.

The post தேடப்படும் குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் ரூ.2.3 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Dada Dawood Ibrahim ,Mumbai ,Karachi, Pakistan ,United Nations ,United States ,Dawood ,India ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!