×

‘Old Is Gold’ என்பதை நிரூபிக்கும் கோவை கார்கள் கண்காட்சி: பொதுமக்களை கவர்ந்த 60-120 ஆண்டுகள் பழமையான கார்கள் அணிவகுப்பு

கோவை: கோவையில் நடைபெற்ற நூற்றாண்டு பழமைவாய்ந்த கார்களின் அணிவகுப்பு மற்றும் இருசக்கர வாகனம் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கோவை விழாவை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கார் கண்காட்சியை தொடங்கி வைத்து செல்ஃபியும் எடுத்து கொண்டார்.

இதில் கோவை, திருப்பூர், பல்லடம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தி இருந்தன. 60 முதல் 120 ஆண்டுகள் பழமையான கார்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. பழைய மாடல் பென்ஸ், சவர்லேட், ஃபோர்டு, பத்மினி, அம்பாசிடர், வோக்ஸ்வேகன் கார்கள், பழைய ஜீப்கள் என 40க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

சாலை விதிகளை பின்பற்றும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பழங்கால கார்களின் பேரணியும் நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் பழமையான இருசக்கர வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த கார் கண்காட்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வியப்புடன் கண்டு ரசித்தனர். கோவை மாநகரின் பல்வேறு சிறப்புகளை எடுத்துக்கூறும் விதமாக ஆண்டு தோறும் கோவை விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post ‘Old Is Gold’ என்பதை நிரூபிக்கும் கோவை கார்கள் கண்காட்சி: பொதுமக்களை கவர்ந்த 60-120 ஆண்டுகள் பழமையான கார்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Car Show Proves 'Old Is Gold ,Coimbatore ,Cosmo Club ,Racecourse Road ,Coimbatore Festival ,Municipal ,Old ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...