×

‘மகளிர் உரிமை தொகை’.. மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு ஜன.10-ல் ரூ.1,000 டெபாசிட்..!!

சென்னை: மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10-ல் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், ரூ.1.06 கோடியே பேர் தேர்வு செய்யப்பட்டு அந்த தொகை மாதந்தோறும் 15ம் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, லட்சக்கணக்கான மகளிர் மேல்முறையீடு செய்தனர். முன்னதாக நவம்பர் மாதம் இந்த மேல்முறையீடு செய்தவர்களில் இருந்து 7.35 லட்சம் மகளிர், உரிமை தொகை திட்டத்தில் சேர தகுதியானவர்கள் என சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த திட்டத்திற்காக மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்த நிலையில் 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2 லட்சம் பேருக்கு வரும் 10-ல் மகளிர் உரிமை தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 1.15 கோடி பேருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘மகளிர் உரிமை தொகை’.. மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு ஜன.10-ல் ரூ.1,000 டெபாசிட்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Anna ,
× RELATED நீட் தேர்வு ஒழிப்புக்கான அத்தனை...