×

அரசு பள்ளியில் அனுமதியின்றி 75 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டி அகற்றம்

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கடத்தூர் : கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 75 ஆண்டுகள் பழமையான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது குறித்து, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.கடத்தூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம், அரசமரம், அசோகமரம் மற்றும் புங்கன் மரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன.

இந்நிலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்த மரங்கள் சிலவற்றை, யாரிடமும் அனுமதி பெறாமல் மர்மநபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.
சில ஆசிரியர்களின் அனுமதியோடு மரங்கள் வெட்டப்பட்டுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, மரங்களை வெட்டியவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post அரசு பள்ளியில் அனுமதியின்றி 75 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Kaduur Government Boys High School ,Government Boys High School ,Kadudur ,Dinakaran ,
× RELATED ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்