×

பாணாவரம் அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இத்தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் இவை முற்றிலும் பழுதடைந்துள்ளது. இத்தொகுப்பு வீடுகள் மேல்தளம் இடிந்து விழுந்து கம்பிகள் தெரிந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது.

அவ்வப்போது சிமென்ட் மேல் தளம் பெயர்ந்து விழுவதால் பொதுமக்கள் இத்தொகுப்பு வீடுகளில் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு தொகுப்பு வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுப்பு வீட்டு பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாணாவரம் அருகே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Panavaram ,Ranipet district ,Kaveripakkam ,Koothampakkam ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...