×

காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அன்மையில் பெய்த மிக்ஜாம் புயலால் விவசாயிகள் சம்பா பருவத்தில் விவசாயம் செய்த நெல் பயிர்கள் பெரும் சேதம் ஏற்பட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் எஞ்சியுள்ள நெல் பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

மேலும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரிதா தலைமையில், அரசு அதிகாரிகள் சிறுகரும்பூர், சித்தஞ்சி, களத்தூர், சங்கரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த சில வாரங்களாக விவசாயிகளை நேரில் சந்தித்து, தாங்கள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யுமாறு கேட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

அப்போது விவசாயிகளிடம் தங்களின் நெல் மூட்டைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து, உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். பின்னர் விவசாயிகள் குறைந்த விலைக்கு வெளி மார்க்கட்டில் விற்பனை செய்வதை தவிர்த்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது விற்பனை செய்து கொள்ளலாம்எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனையடுத்து விவசாயிகள் வரும் பிப்ரவரி, மார்ச், மாதங்களில் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரிதா நேற்று நெல்மூட்டைகளை ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் எடை போட்டு, விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்து, உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்வதாக தெரிவித்தார்.

கோ-51 ரக நெல் குறைந்த பட்சம் விலையாக ரூ.1390-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1401-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் வெள்ளப் பொன்னி ரக நெல் குறைந்த பட்சம் விலையாக ரூ.930க்கும், அதிகபட்ச விலையாக ரூ.940க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஆய்வு செய்த கண்காணிப்பாளர் appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Cyclone Mikjam ,Anmai ,Ranipet district ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...