×

கோத்தகிரி சாலையில் பனி மூட்டத்தால் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – ஒருவர் படுகாயம்

மேட்டுப்பாளையம் : கோத்தகிரி சாலையில் பனி மூட்டத்தால் 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கப்பச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (62). இவரது மனைவி ருக்குமணி (53). மகன் சந்தோஷ் (33). மூவரும் நேற்று காலை கோத்தகிரியில் இருந்து கோவை செல்வதற்காக தங்களது வீட்டில் இருந்து காரில் வந்துள்ளனர். இந்த காரினை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கார் கோத்தகிரி இரண்டாம் பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே பனிமூட்டம் அதிகளவில் இருந்ததால் எதிரில் வந்த வாகனங்கள் தெரியவில்லை.

இதனால் நிலைதடுமாறிய கார் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று காரில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ருக்குமணிக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளதால் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post கோத்தகிரி சாலையில் பனி மூட்டத்தால் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் – ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri road ,Mettupalayam ,Kothagiri road ,Nataraj ,Tummanati Kappachi, Nilgiris district ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி...