×

கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு..!!

சென்னை: கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஜன.9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.

வேலைநிறுத்தத்தை அறிவித்தாலும் அரசுடன் பேசத் தயார் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பின் தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வரவேண்டும் என போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Transport Association ,Labor Welfare Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...