- பெங்களூரு
- இஸ்ரோ
- பி.எஸ்.எல்.வி
- சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம்
- ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரப் பிரதேசம்
- புத்தாண்டு தினம். ...
பெங்களூரு: விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் புத்தாண்டு அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில், ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்டது.
இந்நிலையில், விண்வெளியில் மின்சார உற்பத்தி செய்ய இந்திய தொடங்கியுள்ளது. விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சாத்திய கூறுகளை கண்டுபிடித்து இஸ்ரோ சாதனை செய்துள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 350 கி.மீ. உயரத்தில் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் இருப்பதால் தூய தண்ணீர், வெப்பம் உருவாகும். ஃபியூயல் செல் கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
The post பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை..!! appeared first on Dinakaran.