×

தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 313 போலீசார் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 313 போலீசார் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சரியில்லாமல் 145 பேரும், மாரடைப்பில் 59 பேரும், விபத்தில் 55 பேரும் ஓராண்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 46 போலீசார் பணிக்காலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 40 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் 36 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 76 காவலர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 2020 ஆண்டு ஏறக்குறைய 337 பேரும், 2021ம் ஆண்டு 414 பேரும், 2022ம் ஆண்டு 283 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023ல் 313 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் காவலர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணிச்சுமை இருப்பதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் மற்றும் பணி நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்பது காவலர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 313 போலீசார் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...