×

₹1.2 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

ஓசூர், ஜன.5: ஓசூர் அருகே ₹1.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை, பிரகாஷ் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். ஓசூர் சட்டமன்றத் தொகுதி, ஓசூர் ஒன்றியத்தில் முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தேன்கனிக்கோட்டை மெயின் ரோடு முதல் டி.பாரந்தூர் வரை தார்சாலை அமைக்க ₹1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல், முதுகானப்பள்ளி முதல் ஒட்டர்பாளையம் வரை ₹56 லட்சம் மதிப்பில் தார்சாலை, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், டி.பாரந்தூர் ஆதிதிராவிடர் காலனியில் ₹3 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, முகலூர் கிராமத்தில் ₹2 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, வி.அக்ரஹாரம் கிராமத்தில் ₹2 லட்சத்தில் சிமென்ட் சாலை, எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் ₹1.50 லட்சத்தில் சிமென்ட் சாலை, பி.செட்டிப்பள்ளி காலனியில் ₹2 லட்சத்தில் சிமென்ட் சாலை, பி.செட்டிப்பள்ளி கிராமத்தில் ₹1 லட்சத்தில் சிமென்ட் சாலை, எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் ₹2 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், எஸ்.முதுகானப்பள்ளி காலனியில் ₹1 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகளையும் பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ், திம்மாரெட்டி, பிரவீன், சிவகுமார், அப்போஜிரெட்டி, நரசிம்மன், நந்திஷ், சிவப்பா, சசிகுமார், சீனிவாஸ் மற்றும் நாகப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ₹1.2 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Hosur ,Prakash ,MLA ,Dhenkanikottai Main Road ,Hosur Assembly Constituency ,Hosur Union ,Bhoomi Pooja ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்