×

மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் மாணவன் முதலிடம்

ஊத்தங்கரை, ஜன.5: மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த பாவக்கல் மாணவனுக்கு, பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட அளவில், எதிர்கால உலகம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் ஊத்தங்கரை அருகே பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவரான தரனிஷ் முதலிடம் பிடித்தார். இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமையாசிரியர் பாக்கியநாதன் வாழ்த்தி பேசினார். மேலும், தரனிஷூக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் ₹3000 பரிசுத்தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவித் தலைமையாசிரியர் அவுத்தர் பாஷா, ஆசிரியர் தவமணி, ஆசிரியை தமிழ்செல்வி, சாயிராபானு, வத்சலா, ஷண்முகம், வட்டார வள மைய வசந்தி, ராஜ்கமல், பிரபு, பகுதி நேர ஓவிய ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் பாராட்டினர். இதில் மாணவரின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் மாணவன் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது ஒரு கிலோ பறிமுதல்