×

ஆஸியுடன் மகளிர் டி20 ஆதிக்கம் செலுத்துமா இந்தியா

நவி மும்பை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் அணி டெஸ்ட் தொடரில் தோற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 2 அணிகளுக்கும் இடையிலான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 2வது ஆட்டம் ஜன.7, 3வது ஆட்டம் ஜன.9ம் தேதிகளில் நவி மும்பையில் நடைபெறும். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி தர ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் ஒருநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் அலிஷா ஹீலி தலைமையிலான ஆஸி அணியும் தொடர் வெற்றிக்காக களம் காண காத்திருக்கிறது.

ஆஸி ஆதிக்கம்
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 4ல் ஆஸி வென்றுள்ளது. மற்றொரு ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

* இவ்விரு அணிகளுக்கு இடையில 2008ம் ஆண்டு முதல் இதுவரை 31 டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஆஸி 23 ஆட்டங்களிலும், இந்தியா 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் ரத்து.

The post ஆஸியுடன் மகளிர் டி20 ஆதிக்கம் செலுத்துமா இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Women's T20 ,Aussies ,Navi Mumbai ,Australia women's team ,T20 ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!