×

ரஞ்சி கோப்பை இன்று தொடக்கம் குஜராத் – தமிழ் நாடு மோதல்

வல்சாத்: நாட்டின் முக்கிய உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு நாடு முழுவதும் சென்னை, சேலம், பெங்களூர் என 46 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் முறையாக சேலம் சேர்க்கப் பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஐதராபாத், ரயில்வே, சர்வீசஸ், நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா என 38 அணிகள் களம் காண உள்ளன. இன்று தொடங்கும் லீக் சுற்று ஆட்டங்கள் பிப்.19ம் தேதி முடிகின்றன. காலிறுதி ஆட்டங்கள் பிப்.23ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 2ம் தேதியும், இறுதி ஆட்டம் மார்ச் 10ம் தேதியும் தொடங்கும்.

முதல் முறையாக சாய் கிஷோர் தலைமையில் களம் காண உள்ள தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு அணி இடம் பெற்றுள் சி பிரிவில் சண்டீகர், குஜராத், கர்நாடகா, பஞ்சாப், கோவா, ரயில்வே, திரிபுரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அணி விவரம்: ரவி சாய் கிஷோர்(கேப்டன்), என்.ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர், பிரதோஷ் ரஞ்சன் பால்(விக்கெட் கீப்பர்கள்), சாய் சுதர்சன், பாபா இந்தரஜித், பி.சச்சின், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், எஸ்.அஜித்ராம். எம்.முகமது, சந்தீப் வாரியர், டி.நடராஜன், ஆர்.விமல்குமார், திரிலோக் நாக்.

The post ரஞ்சி கோப்பை இன்று தொடக்கம் குஜராத் – தமிழ் நாடு மோதல் appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy ,Gujarat ,Tamil ,Nadu ,Valsad ,Ranji Cup Test ,Chennai ,Salem ,Bangalore ,Ranji Cup ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...