×

ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு நாளை அளிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்தார்.

The post ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Chennai ,DGP ,Villupuram Criminal Arbitration Court ,Dinakaran ,
× RELATED மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு