×

பூந்தமல்லி – பரந்தூர் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை இயக்கப்படும் பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. உள்ள்து அதில் தோராயமாக 19 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது இதற்கு மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு சுமார் ரூ 10,712 கோடி ஆகும்.

பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எம்ஆர்டிஎஸ்(MRTS) நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post பூந்தமல்லி – பரந்தூர் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,Poontamalli ,Paranthur ,Metro Rail Administration ,Chennai ,Parantur ,Thirumazhisai ,Sriperumbudur ,Department of Special Initiatives ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...