×

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.360 குறைந்தது

சென்னை: தங்கம் விலை. டிசம்பர் 4ம் தேதி ஒரு சவரன் ரூ.47,800க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனை படைத்தது. இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.47,280க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதி சவரன் ரூ.47,360 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,915க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.47,320க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.47,120க்கும் விற்கப்பட்டது.

The post தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.360 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,English New Year ,Shavran ,Dinakaran ,
× RELATED வாரத்தின் முதல் நாளிலே ஷாக்...