×

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர காவல்துறை அறிக்கை!

சென்னை: சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது

இது தொடர்பாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ. 32.186 கிமீ, 21.097 கிமீ மற்றும் 10 கிமீ) “FRESH WORKS CHENNAI MARATHON” ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு 06.01.2023 சனிக்கிழமை காலை 04.00 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை மாரத்தான் ஓட்டம் காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக சென்றடையும்

இந்நிகழ்ச்சி தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* மத்திய கைலாஷ்லிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அவ்வாகனங்கள் LB சாலை,சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

* பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

The post சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர காவல்துறை அறிக்கை! appeared first on Dinakaran.

Tags : Metropolitan Police ,Chennai Marathon ,Chennai ,
× RELATED பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு...