×

பள்ளிவிளை ரயில் நிலையம் செல்லும் வழியில் பாலத்தின் கீழ் பகுதியில் மண் அடைப்பால் தண்ணீர் செல்வதில் சிக்கல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் மழைநீர் வடிகால்கள் புதர்மண்டி, மண் மூடிகிடந்ததால் கடந்த காலங்களில் மழை பெய்யும்போது தண்ணீர் சாலையில் ஓடும் நிலை இருந்தது. தற்போது மாநகர பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களிலும் உள்ள மண்கள், புதர்கள் அகற்றப்பட்டு மழை பெய்து சிறிது நேரத்தில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில இடங்களில் உள்ள மடைகளில் மண் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கும் நிலை இருந்து வருகிறது. அதேபோல் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோயில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இந்த கால்வாயின் குறுக்கே வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை சாலை செல்கிறது.

கால்வாயின் மேல் சிறிய கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ஒட்டி பள்ளிவிளை ரயில்நிலைத்தை அடுத்துள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பாலத்தின் கீழ் பகுதியில் மண்ணால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தண்ணீர் சாலையில் ஓடும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: கிருஷ்ணன்கோவில் கால்வாயில் வரும் தண்ணீரால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநகராட்சி வடிகால் அமைத்து உள்ளது. இந்த வடிகால் மூலம் தண்ணீர் செல்கிறது. தற்போது ரயில்நிலைம் செல்லும் வழியில் உள்ள சிறிய பாலம் மண்ணால் அடைப்பட்டு தண்ணீர் ெசல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியுள்ள மண்ணை மாநகராட்சி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பள்ளிவிளை ரயில் நிலையம் செல்லும் வழியில் பாலத்தின் கீழ் பகுதியில் மண் அடைப்பால் தண்ணீர் செல்வதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Nagarko ,Nagargo ,Budermundi ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்