×

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6-ம் தேதி மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6-ம் தேதி மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் சிறப்பு QR குறியீடு பயண அட்டையை பயன்படுத்தி 6-ம் தேதி மட்டும் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:
சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை இந்த பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறபட்டுள்ளது.

The post சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6-ம் தேதி மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Metro Rail Services ,Chennai Marathon ,Metro Rail Administration ,Chennai ,Marathon ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...